யாழ்ப்பாணக்கல்லூரி வரலாற்று வெற்றி| பொன் அணிகள் மோதல்
யாழ்ப்பாணக்கல்லூரி வரலாற்று வெற்றியைப்பதிவு செய்து சாதனைபடைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் “பொன் அணிகளின் சமர்” போட்டியில் இந்த வெற்றியை 52 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிபெற்று தனதாக்கியுள்ளது.

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக்கல்லூரி எதிர் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் மோதும் இந்த போட்டிக்கு , இந்தவருடம் 108 வருடமாகும்.
குறித்த போட்டியில் இரண்டாவது இனிங்க்ஸ்ஸில் துடுப்பெடுத்தாட்டத்தில் யாழ் சென்பற்றிக்ஸ் நிலைதடுமாற, தனது அபார பந்துவீச்சாலும், களத்தடுப்பாலும் யாழ்ப்பாணக்கல்லூரி வெற்றியை தம்வசப்படுத்தியது.
குறித்த போட்டியை 59 ஓட்டங்களால் வெற்றியை தமதாக்கி , 52 ஆண்டுகளுக்குப்பின் சாதனையை நிலைநாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.