கோபம் என்ற விருந்தாளி..!
கோபம் என்ற விருந்தாளி
கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது
இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது
ஒரே வரியில் சொல்வதனால்
நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது
ஆம்
நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர் சொல்லும் போது
எழுதும் போது
கேட்கும் போது
படிக்கும் போது
செய்யும் போது
என்ற சம்பவங்களால்
இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை
நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்
நமது உணர்வுகளில் மிகவும் மோசமான விளைவுகளைத் தரக்கூடியது எது எனில் அது கோபம் எனலாம்
கோபம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல
ஏனைய உயிரினங்களுக்கும் உரித்தான ஒன்று
கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது
இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது
ஏன் வருகிறது
எளிதில் எவரும்
கோபப்பட மாட்டார்கள்
நம்முடைய உள்ளுணர்வைத் தூண்டும்படியான சம்பவங்கள் நிகழ்ந்தால் தான் கோபம் வீறுகொண்டெழும்
சிலருக்குப் பொய் சொன்னால்
கோபம் வரும்
அப்படினா
அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களைக்
கண்டால் கோபம் வரும்
இன்னும் சிலருக்கோ தொட்டதுக் கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வரும்
ஆனால்
ஒரு சில மனிதர்களோ
அனைத்து நேரத்திலும் கோபப்படுகின்றார்கள்
இப்படியானவர்களை
நோய் எளிதில் தொற்றிக்
கொல்(ள்)லு(ளு)ம்
மனம் எப்பொழுதும் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும்
எந்தக் காரியத்தை எடுத்தாலும் அவர்களால் ஒழுங்காகச் செய்யமுடியாது
ஒருவிதமான குற்ற உணர்ச்சி ஏற்பட்டும்
நரம்புத் தளர்ச்சி ஏற்படும்
இப்படியாக பல பல நோய்களைத்
தேடிக் கொள்ள நேரிடும்
சரி
இந்த கோபத்தை எப்படித்தான் அடக்குவது
கையாளுவது
அலைபாயும் சிந்தனைகளை ஒரு நிலைப்படுத்தி மனதைக் கட்டுப்படுத்தும் பக்குவத்தை நாமடைந்தால் அகிலமும் நமக்கு மண்டியிடும்
ஆம்
கணப்பொழுதில் ஏற்படும் சினம் சிறிதாகிவிடும்
எந்தப் பிரச்சினையாக
இருந்தாலும் மனம் விட்டுப் பேசிவிடுங்கள்
பேசும் போது
நீயா நானா என்பதும்
பேசுவதும்
பேசப்படும் பொருள் பற்றி
மட்டுமே பேசுவது நல்லது
பேசுபவரை மடக்குவதுப் போல
கிண்டல் செய்வது
போன்ற செயல்கள் கூடாது
மற்றும்
விவாதங்களை நல்ல முறையில்
ஆரோக்கியமான வழியில்
கொண்டால் மிக்க நலம்
குறைகள் இல்லா மனிதனும் இல்லை
குறைகள் இல்லா இயற்கையும் இல்லை
ஆக
மற்றவரைப் புரிந்து செயல் பட்டால்
இதனாலும் கோபங்கள் ஏற்படுவதை தடுத்துவிடலாம்
சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசும்போது உண்மை நிலையினை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்
அதை விடுத்து பிறர் சொன்னார்கள் என்பதற்காக பலருடன் பகைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்
முதலில் கோபம் ஏற்படுத்தக் கூடிய சூழலை தவிர்த்துக் கொள்ளுங்கள்
கோபத்தினை ஏற்படுத்தக் கூடிய சிந்தனைகளையும் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

ஆம்
நண்பர்களே
பிறரை நேசித்து அன்புகாட்டி மனதை ஒருநிலைப்படுத்தி தூய சிந்தனையுடன் இருந்தால் அன்பு உங்களைத் தேடிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
ஆகையினால்
கோபம் என்னும் அந்த
விருந்தாளியைக்
கொடிய விலங்கினை
நம் நல் உள்ளத்திலிருந்து
விலக்கி அனைத்து உயிர்களிலும்
அன்பு செலுத்தி வாழப் பழகிக் கொள்ளுவோம்
அதற்காக தினமும் பயிற்சி செய்திடுவோம்
எனது குறள்
கோபமில்லா வாழ்வு அது மருந்தில்லா நல்வாழ்வு என்றும்
திருக்குறள் சொல்வது
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்
குறள் எண் – 305
நன்றி
இவண்
பா. சுரேஷ் பாபு
அம்பத்தூர்
சென்னை
09/03/2025