போகியில் இவை எல்லாம் பொசுங்கிட வேண்டும்..!

தலைப்பு
போகிப் பண்டிகை

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்.

புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம்
பகைதரும் நட்பு துளியும் வேண்டாம்
வாகை சூட இலவசம் வேண்டாம்
வகைமிகு உணவுகள் வயிற்றுக்கு வேண்டாம்.

தீவிரவாதம் தீயில் பொசுங்கிட வேண்டும்
தீண்டாமைத் தீயை அணைத்திட வேண்டும்
அன்பென்னும் அங்குசம் எடுத்திட வேண்டும்
வன்மிகு யானையை அடக்கிட வேண்டும்

சுத்தம் சுழன்று சுகம் தர வேண்டும்
அசுத்தம் அகன்று விடை பெற வேண்டும்
நித்தம் நீதி நிலை பெற வேண்டும்
சத்தம் “பொங்கலோ பொங்கல்” ஒலித்திடல் வேண்டும்.

போ

பஞ்சமின்றி பாரதம் படைத்திடல் வேண்டும்
லஞ்சமிகு பாரதம் தழைத்திடல் வேண்டாம்
பழையன போக்கிடவே ! புதியன புகுத்திடவே !
அழைப்போம் ! தழைப்போம் ! “போகி” நன்னாளிலே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *