அவுஸ்திரேலிய இந்திய அணிகள் இன்று பலபரீட்சை..!

அவுஸ்திரேலி பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் மோதுண்டு வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 09 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.இரண்டாவது ஆட்டத்தில் 06 விக்கட்டுகள் வித்தியாசததில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.

இதனையடுத்து இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சம நிலையை எட்டியது.இந்நிலையில் 3வதும் இறுதியுமான போட்டியில் இரு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடுகின்றது.

ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி இதில் வெற்றிப்பெற வேண்டும் என கடும் முயற்சி எடுத்து விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதே வேளை அவுஸ்திரேலிய அணியும் தொடரை கைப்பற்ற முயற்சி எடுத்து விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு விறுவிறுப்பான போட்டியை இன்றைய தினம் காணக்கூடியதாக இருக்கும்.இப்போட்டியானது மும்பையிலுள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இரவு 7.00க்கு ஆரம்பமாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *