“ஆனந்தி சூரியப்பிரகாசம்” நினைவு வணக்கம்| மிகநிறைவாக நடந்தேறியது

பிபிசி தமிழ் ஒலிபரப்பாளராக உலகமக்கள் பலராலும் அறியப்பெற்ற ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. லண்டனில்  ஊடகப்பணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும்,  ஊடகத்துறை பணியாளர்கள் பலரும் இணைந்து இந்த நினைவு அஞ்சலியை , மறைந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களுக்கு வழங்கியிருந்ததனர்.
இந்த நினைவு வணக்க நிகழ்ச்சி ஏற்பாட்டை  சர்வதேச தமிழ் செய்தியாளர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த நினைவு வணக்க நிகழ்ச்சியில், ஊடகத்துறை சார்ந்த மற்றும் அமைப்புக்கள் சார்ந்த பிரமுகர்கள் பலரும் உரையாற்றியிருந்தனர்.
குறிப்பாக நினைவு வணக்க  நிகழ்ச்சியில் பிபிசி நிறுவனத்தில் பணியாற்றிய Fransis Harrison மற்றும் சக ஊழியர்கள் சிலரும்  பங்குபற்றி உரையாற்றியிருந்தனர்.

பலரும் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் ஆளுமை மற்றும் அவரது சிறப்பான பணிகள் குறித்து மீள நினைவூட்டியதாக, தங்கள் உரைகளை வழங்கியிருந்தனர்.
இந்த நினைவுவணக்க நிகழ்ச்சியை மூத்த ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.

நிறைவாக ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் மகள் அவர்களின் , நினைவு வணக்க மலர்மாலை கையளிக்கப்பட்டு, நினைவுவணக்க நிகழ்ச்சி நிறைவுக்குவந்தது.

ஈழத்தின் தமிழரின் குரலாக, உலக அரங்கில் ஓங்கி ஒலித்த பெண் குரலாக ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் ,தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை நேரடியாக செவ்வி கண்டு பிபிசி தமிழில் ஒலிபரப்பியிருந்தவர் என்பது யாவரும் அறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *