மைதானத்தில் மயங்கி வீழ்ந்த கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு..!
துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த சமயம் மைதானத்தில் மயங்கி விழுந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
40 வயது நிரம்பிய ஜுனைத் ஜாபர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை அடிலெய்டில் உள்ள கான் கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற ஓர் உள்ளூர் போட்டியில பங்கு பற்றிய நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
16 ஓட்டங்களுடனுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த நேரத்தில் திடிரென மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார்.அந்த சமயம் வெப்பத்தின் அளவு 41.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்துள்ளது.
ரமலான் காலத்தில் நோன்புடன் இவர் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உடனடியாக அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரை பரிசோதித்த வைத்தியர்கள், ஏற்கனவே இவர் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
