நெதர்லாந்தை வீழ்ந்தி இலங்கை அணி வென்றது..!

ஐசிசி உலககிண்ண போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் தகுதி காண் சுற்று இறுதி போட்டி ஹராரேயில் நடைப்பெற்றது.

இதில் இலங்கை நெதர்லாந்து அணிகள் பலபரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

234 பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்படெடுத்தாடிய நெதர்லாந்து அணி 23.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. நெதர்லாந்து அணிசார்பில் மேக்ஸ் டவுட 35 பெற்றார்.மற்றைய வீரர்கள் சிறப்பாக பிரகாசிக்கவில்லை.

இலங்கை அணி கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியையும் சிறப்பாக விளையாடி இருந்தமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *