இதை பார்த்து இனியாவது திருந்துவார்களா..?

சின்ன குழந்தை முதல் அனைவருக்குமே வட்சப் உண்டு ,முகப்புத்தகம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோணத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களை புகைப்படமெடுத்து பதிவேற்றுகிறார்கள்.

குறிப்பாக இளம்பெண்கள்,சிறுபிள்ளைகள் கூட தங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் அனுமதிக்கிறார்கள்.

ஆனால் மெட்டா நிறுவனத்து உரிமையுடையவரான
ஸுக்கர் பேர்க் கடந்த ஜூலை 4ம் திகதி இன்ஸ்டகிரேமில் தனது குடுமப புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதில் தனது இரண்டு மகள்களின் முகங்களை ஈமோஜிகளை கொண்டு மறைத்து பதிவிட்டுள்ளார். இச்செயல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஸுக்கர் பேக்கர் தனது குழந்தைகளை மறைத்து ,பல மில்லியன் கணக்கான பெற்றோர்களையும் பிள்ளைகளையும் அதைசெய்ய அனுமதிக்கும் பாரிய தளங்களை உருவாக்கினார் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

சமூக ஊடகங்களுக்கு அடிதையாக இருக்கின்ற இன்றைய தலைமுறை இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தங்கள் குழந்தைகள்,பெண்கள் போன்றவர்களின் புகைப்படங்களை ஒன்லைனில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல தாத்தா,பாட்டி,நண்பர்கள் ,உறவினர்,ஆசிரியர் என அனைத்து தரப்பினரும் தனியுரிமை ,பாதுகாப்பு ,எதிர்காலம் ,போன்றவற்றை கருத்திற்கொண்டு புகைப்படங்களையோ,தங்களைப்பற்றிய தகவல்களையோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதைப்பார்த்து இனியாவது திருந்தினால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *