உக்ரைன் ரஷ்ய போர் முடிவிற்கு வரும்- வெள்ளை மாளிகை..!
கடந்த 3 வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்ய யுத்தமானது நிகழ்ந்து வருகிறது. இதனை முடிவிற்கு கொண்டுவரும் நோக்குடன் அமெரிக்கா முயற்சித்துவருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கருத்து வெளியிட்டுள்ளார்.”அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி இருவரும் பேசிக்கொண்டனர்.அப்போது உக்ரைன் ரஷ்ய போரில் அமைதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தேவைப்பற்றி பேசிக்கொண்டனர்.
நீண்டகால அமைதியுடன் இந்த போர் முடிவிற்குவருவதற்கான தேவைப்பற்றி தலைவர்கள் இருவரும் பேசி ஒப்புக்கொண்டதுடன் ,அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்படுத்துவதற்கான தேவைப்பற்றியும் வலியுருத்தினர்.இதே போன்று ரஷ்ய மற்றும் உக்ரைன் நாடுகளின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ஏற்ப உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி யுடனும் ட்ரம்ப் பேசினார்” என்று தெரிவித்தார்.
