இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் மூத்த தலைவர் உயிரிழப்பு..!
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் உயிரிழந்துள்ளார்.இவர் அரசியல் பிரிவு மூத்த தலைவராக செயற்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கான்யூனிசில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது.இதன் போது அவரது மனைவியும் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இஸ்ரேலானது கான் யூனிஸ்,ரபா உள்ளிட்ட பல பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 20 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.