அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்..!
அழிந்து வரும் சிட்டுக்குருவி
அழகான குருவி அடைக்கலமாக வந்து அமர்ந்ததே
ஆதாரமாக திறனையும் தானியமும் கொடுக்க
இன்பமாய் உண்டு இனிய ராகமும் பாடிடுமே
ஈடுபாட்டுடன் நாமும் அதனை கவனித்தாலே
உரிமையுடன் கூடி வாழ்ந்து மகிழுமே

ஊரையே சுற்றினாலும்
நம் இல்லத்திற்கு பறந்து வந்திடு மே
எளிதாக அட்டை பெட்டியில் கூடு கட்டி வைத்தாலே
ஏறி ஏறி ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடுமே
ஐயமின்றி அழகிய அலகால் கொத்திக் கொத்தித் தின்னும் அழகைக் காணலாமே
ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் சிட்டுக் குருவிகளை வரவேற்று வாழ்வளிப்போமே
ஓராயிரம் கோடி கொடுத்தாலும் கிடைத்திடுமோ இவ்வின்பம்
ஔடதமின்றி இன்பமாய் சுதந்திரமாக சிட்டுக்குருவிகள் பெருகிட பேருதவி செய்வோமா
இஃது இன்றைய நிலையில் மனதிற்கு இன்பம் தந்து
நாமும் குழந்தைகளாக மாறி சிரித்து வாழ வைக்குமே
அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவோமா?
நன்றி
திருமதி.ஒ.அமுதா முருகையன்
சேலம்.