இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரவு மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் ஏரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் சேவையின் ஊடான பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாடுகள் உறுதி செய்யப்படும் வரை, நாட்டில் இந்த சேவையை நடைமுறைப்படுத்த புதிய அரசாங்க அனுமதி வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.