உள்ளக கிரிக்கெட் உலகக்கிண்ணம் – இந்தவருடம் இலங்கையில் – WICF அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமை இலங்கை உள்ளக கிரிக்கெட் சபை (CICA) இற்கு வழங்கப்பட்டுள்ளதாக உலக உள்ளக கிரிக்கெட் சம்மேளனம் (WICF) அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 12ஆவது முறையாக நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் ஆடவர் திறந்த பிரிவு (Men’s Open), மகளிர் திறந்த பிரிவு (Women’s Open),22 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆடவர் (U22 Men’s), 22 வயதிற்கு கீழ்ப்பட்ட மகளிர் (U22 Women’s) என நான்கு பிரிவுகளில் நடைபெறும்
இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் அனைத்துதலவத்துகொட அவுஸ்டேஷியா உள்ளக அரங்கில், செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 05 வரை நடைபெறவுள்ளன.
உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் முதன்முறையாக 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்கமில் நடைபெற்றது. இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இலங்கை இந்த முக்கியமான போட்டியை நடத்தவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.