நிலநடுக்கத்தின் காரணமாக மசூதி இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் உயிரிழப்பு..!
மியன்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தாய்லாந்தில் மிக கடுமையாக உணரப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் உணரப்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.இதனை தொடர்ந்து மேலுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மியன்மாரின் மத்திய பகுதியில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்தின் பேங்கொக்கிலும் கடுமையாக உணரப்பட்ட நிலையில் பல கட்டிடங்களில் இருந்து மக்கள் ஓடிவரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

தாய்லாந்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிஇருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை மியன்மாரின் மண்டேலா பகுதியில் மசூதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியகியுள்ளது.பல இடங்களில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.