Gamesகிரிக்கெட் செய்திகள்விளையாட்டுவிளையாட்டு கழகங்கள்-Sports Clubs

இளவயதில் கத்தாரில் கிரிக்கெட் நடுவரான இலங்கையர்

கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டுச்சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்றத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கத்தார் Asian Town சர்வதேச கிரிக்கெட் மைதானதில் இரவு போட்டியாக இடம்பெற்ற இத்தொடரில் கட்டார் கிரிக்கெட் சபையில் பதிவு செய்யப்பட்ட 14 மிக பலம் பொருந்திய முன்னணி (Premium club) கழகங்கள் போட்டிபோட்டு தங்களது திறமையினை வெளிக்காட்டியிருந்தனர்.
இத்தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளைச்சேர்ந்த பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இத்தொடரில் மொத்தமாக 49 போட்டிகளுக்காக 22 சிறந்த நடுவர்கள் (Umpires) கடமையாற்றினர். இவர்கள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனார்.
இப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட ஒரேயொரு நடுவர் என்பதுடன், இளம் வயது நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இவர் சிறப்பான முடிவுகளையும் சிறந்த தீர்ப்புகளையும் வழங்கியதன் காரணத்தால் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்குமான மிக முக்கியமான போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றினார் என்பதும் சிறப்பம்சமாகும்.
இவ்விறுதிப்போட்டிக்கு இவருடன் இணைந்து பாக்கிஸ்தானைச்சேர்ந்த நடுவரும் இணைந்து கடமையாட்டினார். இப்போட்டிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக கட்டார் கிரிக்கெட் சபையின் செயலாளருடன் மிக முக்கிய அதிதிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுக்களையும் வழங்கி வைத்தனர்.
இத்தொடருக்கு கட்டார் நாட்டின் பிரபல நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தது.
இவர் கத்தார் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகின்ற டி20, ஒரு நாள், பல்கலைக்கழக, பாடசாலைகள், மகளிரணி மற்றும் நிறுவனங்களுக்குடையிலான போட்டிகள் எனப்பல்வேறு போட்டிகளில் தனது திறமையினால் குறிப்பிட்ட வருடங்களுக்குள் மிக சிறப்பான முறையில் நடுவராகக் கடமையாற்றி வருகின்றார்.
கத்தார் கிரிக்கெட் சபையில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட நடுவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் இன்னும் சில மாதங்களில் கத்தார் கிரிக்கெட் சபை சார்பாக ICC யினால் நடாத்தப்படவிருக்கின்ற தரம் -2 பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கை கிரிக்கெட் காட்டுப்பாட்டுச்சபையின் தரம்-4 நிலை நடுவராகவும், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தரம் 2ம் நிலை நடுவராகவும் கடமையட்டுகின்றார்.
இவர் கடந்த வருடம் நடை பெற்ற தரம் 3 நடுவர்களுக்கான பரீட்சையில் தன்னுடைய வெளிநாட்டு பயணம் காரணமாக தோற்றவில்லை.
இவர் தற்போது கத்தார் நாட்டில் pro divison கிரிக்கெட் நடுவராக இலங்கை நாட்டின் சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரே இளம் வயதுடைய நடுவர் என்பதும் விசேட அம்சமாகும்.
இவர் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நற்பிட்டிமுனை NCC விளையாட்டுக்கழகத்தின் தலைவர் என்பதுடன், தற்போது கத்தார் நாட்டில் சர்வதேச பாடசாலையொன்றில் ஆசிரியராகவும் கடமையாற்றும் சிறந்த கிரிக்கெட் வீரருமாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *