காஷ்மீரிலிருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது..!
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா,ரஷ்யா,சவுதி அரேபியா,இத்தாலி என பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தன்து எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
“காஷ்மீரிலிருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது.பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும்,காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும்,ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன.”என பதிவு செய்துள்ளார்.
