திருப்பத்தை ஏற்படுத்திய பிடி எடுப்பு..!
ஐ.பி.எல் தொடரின் 43 வது லீக் போட்டி சென்னை சேபாக்கத்திலுள்ள எம்.ஏ சிதம்பரம் விளையாட்ரங்கில் நடந்தது.இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் பல பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.இதில் முதல துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.155 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய 18.4 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியின் போது கமிந்து மெண்டிஸ் அந்நரத்தில் பாய்ந்து டிவால் பிரேவிஸ் அடிந்த பந்தை மிக சிறப்பாக பிடித்தார்.இந்த பிடி எடுப்பானது ஐதராபாத் அணியின் வெற்றிக்கு மேலும் வழிவகுத்தது. ஒரு வேளை இந்த பிடி எடுப்பை கமிந்த மெண்டிஸ் தவற விட்டிருந்தால் சென்னை அணி மேலும் அதிகமான ஓட்டங்களை பெற்றிருக்க கூடும். இந்த போட்டியின் திசையை மாற்றிய பிடி எடுப்பின் காணொளியானது சமூக வலை தளங்களில் வைரலாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.