போப் பிரான்ஸிஸ் ன் உடல் நல்லடக்கம்..!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்ஸிஸ் ன் இறுதி சடங்கு இன்று வத்திக்கானில் நிகழ்த்தப்பட்டது. அவரது உடல் கடந்த 23 ம் திகதி முதல் வத்திக்கான் புனித பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.இவருக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலித்தினர்.
இன்று விசேட திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு ,வத்திகானிற்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா வில் அடக்கம் செய்யப்பட்டது.

போப் பிரான்ஸிஸ் தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுப்பட்டதை நினைவுக்கூறும் வகையில் ஏழைகள் மற்றும் கைவிட்ப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.