வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டி, மாணவனின் முகத்தில் கீறிய நிலையில், தரையில் வீழ்ந்தமையால் ஏற்பட்ட காயம் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
எனினும் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர், 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முறையாகப் போடுவதும், விலங்கு கடித்தாலோ அல்லது கீறப்பட்டாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.