வறுமையை உழைப்பால் பூட்டு
🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪 *பூட்டு* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪
பூட்டு
திண்டுக்கல்
பூட்டும் தோற்றுவிடுகிறது
இன்றையத் திருடர்களிடம்…
சாவியை நீங்கள் தான்
தொலைத்தீர்கள்
தண்டனை என்னவோ
பூட்டுக்கு…?
வெளியிலிருந்து
பூட்டச் சொன்னால்
நீங்கள் உள்ளிருந்து
பூட்டிக்கொள்கிறீர்கள்…..
பொருள்களை
திருடாமலிருக்கப் பூட்டினால்
திருடி விடுகின்றனர்
பூட்டையே…!
பூட்டாதக் கதவை
தட்டச் சொன்னால்
நீங்கள் பூட்டியக் கதவையே
தட்டிக் கொண்டிருக்கிறீர்…!!
கண்களின் பூட்டு
உறக்கம்….
வார்த்தையின் பூட்டு
மௌனம்..
மனதின் பூட்டு
தியானம்
மலரின் பூட்டு
மொட்டு….
வாயைப் பூட்டிவை
வார்த்தை வெளியேறாமல்…
மனதைப் பூட்டி வை
ஆற்றல் வெளியேறாமல்…
பூட்டுவது நல்லது தான்
அதற்காக
காது மூக்கை
பூட்டி வைக்கலாமா…?
வீட்டை பூட்டுவதற்குத் தான்
பூட்டு இருக்கிறது என்று
நினைத்து விடாதே !
இன்னும்
சில பூட்டுக்களும்
இருக்கத்தான் செய்கிறது….
அறியாமையை
அறிவால் பூட்டு…..
அகங்காரத்தை
அடக்கத்தால் பூட்டு…..
மூடநம்பிக்கையை
பகுத்தறிவால் பூட்டு……
வெறுப்பை
பாசத்தால் பூட்டு……
சுயநலத்தை
பொதுநலத்தால் பூட்டு….
சோகத்தை
மகிழ்சாசியால் போட்டு ….

அழுகையை
சிரிப்பால் பூட்டு…….
வறுமையை
உழைப்பால் பூட்டு…….
பூட்டைப் போல்
நாம் என்று கடமையை
செய்யப் போகிறோம்……?
சாவி பூட்டும் போல்
நாம் என்று வாழப்போகிறோம்….?
பூட்டுதான்
திருடர்களை
உருவாக்குகிறதோ ? *கவிதை ரசிகன்*
🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪