பாலஸ்தீனம் நோக்கி நிவாரண உதவுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்..!
துனிசியாவில் இருந்து பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்றி சென்ற கப்பல் மால்டா கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கப்பல் தீப்பரவலுக்குள்ளானதுடன் ,நீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து கப்பலில் பயணித்தவர்கள் அவசரகால உதவியினை நாடியதை அடுத்து மற்றுமொரு கப்பல் வந்து கப்பலில் பயணித்தவர்களை மீட்டெடுத்தது என மால்டா அரசு தெரிவித்துள்ளது.இந்த கப்பலானது மத்திய தரை கடலின் சர்வதேச கடற்பரப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனம் செல்லும் முன் மால்டாவில் 40 பேரை ஏற்றி செல்ல கப்பலானது மால்டா நோக்கி புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களில் சுவீடன் நாட்டின் தன்ஆர்வலர் கிரேட்டர் தன்பெர்க்கும் உள்ளடங்குர் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேலின் தடையை மீறி இந்த கப்பலானது பட்டியால் வாழும் மக்களும் நிவாரண உதவிப்பொருட்களை கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த கப்பலை மனித உரிமைகள் குழுவினர் இயக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
.
