இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிக்கிறது.-சீனா..!
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுஹதுறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.”இந்தியாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கை வருத்தத்தக்கது.இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேணடும்.தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலைக்கொள்கிறோம்.இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும் .அவர்கள் சீனாவின் அண்டை நாடுகளும் கூட.

சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது.அமைதி மற்றும் ஸ்த்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயற்படவும் ,அமைதியாக இருக்கவும் ,நிதானத்தை கடைப்பிடிக்கவும்,நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.