இஸ்ரேல் சிரியாவிற்கிடையில் பேச்சுவார்த்தை..!
சிரியாவில் சன்னி பிரிவினர்க்கும் டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்க்கும் கடந்த சில நாட்களாக மோதல் இடம் பெற்றுவருகிறது.இதன் காரணமாக 30ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.டுரூஸ் மதத்தினர் இஸ்ரேலிலும் வசித்து வருவதால் அவர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் செயற்பட்டுவருகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த பதற்றத்தை தடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் சிரியா பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இரு நாடுகளுக்கிடையிலும் சுமூகமான உறவை பேண இந்த பேச்சுவார்த்தை நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.