இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்-அமெரிக்கா..!
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பதாக பாகிஸ்தான் மக்களுக்கு செபாஷ் ஷெரிப் உரையாற்றினார்.”இந்திய தாக்குதலில் உயிர் நீத்த அப்பாவிகளின் ரத்ததுக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்.பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பநங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதை காட்டினோம் .எல்லைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது.பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் இருந்து தாக்கினர்.
எதிரியின் விமானங்கள் துண்டு துண்டாக சிதறின .பாகிஸ்தான் நிச்சியம் பழிவாங்கும் .இந்தப்போரை இறுதி வரை எடுத்துச்செல்வம்.என் பாகிஸ்தான் மக்களே,உங்கள் பாதுகாப்புக்கு நமது இராணுவம் நிற்கும்.நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் .பாகிஸ்தான் பநங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் நம்மை நம் பாதையிலிருந்து விலக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் .ஆனால் பாகிஸ்தான் ஒற்றுமையாக நிற்கிறது.”என்றார்.
