55 நாட்களின் பின் மீனவர்கள் மீட்பு..!
55 நாட்களின் பின், நடுக்கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பெரு தலைநகரம் லிமாவில் இருந்து மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டது.5 மீனவர்களுடன் பயணித்த குறித்த படகு கடந்த ஜனவரி மாதம் சேதமடைந்த நிலையில் குறித்த மீனவர்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
குறித்த மீனவர்களை தேடும் பணி நடைப்பெற்று வந்த நிலையில் பக்கத்து நாடான ஈக்குவடாரின் கலபகோஸ் தீவு அருகே 5 மீனவர்களும் கண்டுப்பிடிக்கப்பட்டு பெரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
