இலங்கையின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் குறித்த பேச்சுவார்த்தை மே 27 அன்று ஆரம்பம்!

இலங்கையின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மே 27 ஆம் திகதி வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான தூதுக்குழு இலங்கை சார்பில் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும்.
இது இரண்டாவது சுற்று கலந்துரையாடலாக அமைகிறது. இது இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர ஈடுபாடு மற்றும் பொருளாதார உரையாடலை பிரதிபலிக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் சர்வதேச வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.