கழுகைக்கூட கலைக்கும் வல்லமை கொண்ட எங்களூர் கரிக்குருவி
கரிக்குருவி அல்லது இரட்டைவால் குருவி என்று அழைக்கப்படும் இந்தக் குருவி இலங்கையில் வடமாகாணத்திலும் கிழக்கில் தமிழர் வாழும் சிலபகுதிகளில் மாத்திரம் காணப்படுகிறது.
கரிக்குருவிக்கு எப்போதும் தமிழர் வாழ்க்கையில் விசேட இடம் உள்ளது. சோதிடத்தில் மாத்திரமல்லாது திருவிளையாடல் புராணத்திலும் கரிக்குருவியின் வரலாறு இடம்பெற்று இருக்கிறது. அனைத்து குருவிகளினாலும் தாக்கப்பட்ட கரிக்குருவி இறுதியில் சொக்கநாதரை சரண் அடைந்து அவருடைய அருளால் வீரம் நிறைந்த வலியன் குருவியாக மாறியதாக புராணம் கூறும்.
அதை வெளிப்படுத்துவது போல கரிக்குருவி சிறிய குருவியாக இருந்த போதிலும் தனது எல்லைக்குள் வரும் காகம் , பருந்து , கழுகு உட்பட அனைத்து பெரிய பறவைகளையும் தாக்கி துரத்தும் துணிந்த குருவியாக காணப்படுகிறது.
கரிக்குருவியிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பல பாடங்கள் இருக்கின்றன.
சிறாப்பான இயல்புகள் நிறைந்த எங்களூர் கரிக்குருவியின் புகைப்படத்தை இங்கே காணலாம்
பறவையின் பெயர் :கரிக்குருவி Black Drongo
அவதானிக்கப்பட்ட நாள்/Date of Observation : 7.2.2022
அவதானிக்கப்பட்ட இடம் /Location: Jakkarai Marsh Reserve, Jaffna District, Sri Lanka.
எழுதுவது ;டொக்டர் முரளி வல்லிபுரநாதன்