ஒரே நாளில் 71 பில்லியன் டொலர் பெறுமதியை பங்குச் சந்தையில் இழந்தனர் சீனத் தனவந்தர்கள்.
திங்களன்று சீனாவின் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் விழ்ச்சியால் நாட்டின் பெரும் தனவந்தர்கள் இழந்த மதிப்பு சுமார் 51 பில்லியன் டொலர்களாகும். குடிநீர்ப் போத்தல்களை விற்கும் நிறுவன அதிபர் ஷொங் ஷன்சான் 5 பில்லியன் பெறுமதியை ஒரே நாளில் இழந்தார். அவர் சீனத் தனவந்தர்களில் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராகும். தொடர்ந்தும் 60.3 பில்லியன் டொலர்கள் சொத்துக்குப் பெறுமதியான அவரது நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே 10 விகிதத்தால் வீழ்ச்சியடைந்தன.
திங்களன்று அதிகாலையில் வெளியான செய்திகளில் ரஷ்யா தனது ஆயுதங்களை வாங்க சீனாவை நாடியிருந்தது என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தார்கள். சீனாவும், ரஷ்யாவும் அதை மறுத்திருந்த போதும் அப்படியொரு நிலபரத்தில் சீன நிறுவனங்களின் மீதும் புறக்கணிப்புக்கள், தடைகள் சர்வதேச ரீதியில் விதிக்கப்படலாம் என்ற பயத்திலேயே சீனாவின் பங்குகளின் விலைகள் பெரும் தளம்பலைக் கண்டதாக் குறிப்பிடப்படுகிறது.
மூன்றாவது அதிக சொத்துள்ள பொனி மா சுமார் 3.3 பில்லியன் டொலர்களை இழந்தார். சீனாவின் இரண்டாவது தனவந்தரான 44. 5 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு உரிமையாளரான ஷாங் யைமிங் நிறுவனமான பைட் டான்ஸ் பங்குச்சந்தையில் இல்லாததால் அதிக தாக்குதலுக்குள்ளாகவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்