கற்றது ஒருதுளி மண்| குட்டிக்கதை படிப்போமா?
“வா கண்ணா, அப்பா உனக்கு இந்த மல்லிகை பூவின் பாகங்களை சொல்லித்தருகிறேன்” என்று என் 4 வயது மகனை என் அருகில் அழைத்தேன்…
“ம் சொல்லுங்கப்பா,” என்றான் ஆர்வமாக….
இன்று விஜய தசமி அல்லவா….
குழந்தைக்கு சொல்லித்தருவதற்காக
அந்த மல்லிகை பூக்களின் வெள்ளை இதழ்களை தனியே பிரித்து ஒரு பலகை மீது வைத்து “இது அல்லி வட்டம்….”
என்றேன்….
“சரியப்பா” என்றான் குழந்தை…
“இதோபார் பச்சையாக இருக்கு இல்ல…இது புல்லி வட்டம் “என்று அதையும் பலகை மீது வைத்தேன்…..
“ஓ…”ஆர்வமாக கவனித்தான்….
“இதோ மஞ்சள் நிறமாக இருக்கு ல்ல…இவை மகரந்த தாள் வட்டம்…”கடைசியாக “இது சூலக வட்டம்” என்றேன்…..நான் தாவரவியலில் PHD முடித்திருக்கிறேன்…..
குழந்தைக்கு தாவரவியலில் ஆர்வத்தை ஏற்படுத்த இன்று இவற்றை சொல்லித் தந்து கொண்டிருந்தேன்….
கண்களில் வழிந்த ஆர்வத்துடன் அந்த பலகையில் மல்லிகை மலரின் பாகங்களைஉற்று நோக்கிய என்மகன்…
“சரிப்பா…வாசனையை எங்கப்பா வச்சிருக்கே …”
என்றான்….என் PhD அறிவு ஆட்டம் கண்டது…குழந்தையின் கேள்வி முன்னே…..
எழுதியது : சு.ஜெயக்குமாரி