ஐக்கியராச்சியம் முழுவதிலும் தொடர்கிறது போராட்டங்கள்|குறைந்தது 100பேர்  கைது

ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக, முக்கிய நகரங்களில்  தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகளும் குழப்பங்களும் உண்டானதைத் அடுத்து குறைந்ததது 100 பேர் நாடுமுழுவதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக குற்றவியல் நடவடிக்கைகளில் பிரிட்டனில்  ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ள பிரிட்டிஸ் அரசாங்கம், இதற்காக எந்தளவிலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எச்சரிக்கிறது.

Hull , Liverpool, Bristal , Manchester, Strok on trent , Blackpool , Belfast உள்ளிட்ட பகுதிகளில் தற்சமயம் வெடித்துள்ள போராட்டங்களில் செங்கற்கள் வீசப்பட்டும், கடைகள் சூறையாடப்பட்டும், சில இடங்களில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டும்  மிக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக இப்போது குறிப்பிடப்படுகிறது.

பிரித்தானிய சமூகக்கட்டமைப்புகளில்
வெறுப்பை விதைக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கு” எதிராக எந்த அளவிலும் அதிகபட்ச  நடவடிக்கைகளை  எடுக்க காவல்துறைக்கு முழு ஆதரவை  வழங்குவதாக பிரதமர் Sir Keir Starmer அறிவித்திருக்கிறார்

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர ஏனைய இடங்களிலும் சிறுசிறு அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை காவல்துறை உறுதிப்படுத்தும் அதேவேளை  வன்முறையாக மாறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

கடந்த திங்களன்று Southport இல்  மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின்   நகரங்களில்  இப்படியான அமைதியின்மை கடந்த நாள்களாக ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *