இடைகால அரசாங்கத்தின் தலைவராக இவர் நியமனம்..!
பங்ளாதேஸத்தில் கடந்த சில வாரங்களாக மாணவர்களால் போராட்டம் தீவிரமாக இடம் பெற்று வந்த நிலையில் பங்களதேஸின் பிரதமர் ஷேக் ஹசினா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு தொடர்ந்து போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.இதனையடுத்து பங்களதேஸின் பாராளுமன்றத்தை ஜனாதிபதி முஹமது சஹாப்தீன் கலைத்து இருந்தார்.
இதனையடுத்து நேற்றைய தினம் பல்கலைகழக மாணவர்களின் பிரதிநிதிகள்,முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் இடைகால அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் போது முஹமது யூனிசை இடைகால அரசாங்கத்தின் தலைவராக நியமிக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.இவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.