ஆடி வெள்ளி வழிப்பாடு..!
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையானது மிகவும் சிறப்பு வாய்ந்தது.ஆடி மாதத்தில நான் வெள்ளிக்கிழமைகள் வரும் .இந்த வெள்ளிக்கிழமைகளில் அம்மனை ஒவ்வொரு வடிவங்களில் மக்கள் வழிப்படுவர்.
வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு நேரத்தில் தேசிக்காய் தீபத்தினை ஏற்றி மக்கள் வழிப்படுகின்றனர்.மேலும் அம்பிகைக்கு வேப்பிலை மாலை,தேசிக்காய் மாலை என்பவற்றை சாற்றி வழிப்படுகின்றனர்.மேலும் விளக்கினை அம்பிகையாக எண்ணி அந்த விளக்கிற்கு பூஜை செய்தும் வழிப்பட்டு வருவது வழக்கம்.
கடன் சுமை தீரவும்,குடும்ப பிரச்சினைகள் குறையவும்,திருமணம் நடக்க வேண்டியும்,குழந்தை வரம் வேண்டியும் வழிப்பாடு ஆற்றுகின்றனர்.இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம்.
இலங்கையில் பல அம்மன் ஆலயங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல மக்கள் இந்த ஆடி மாதத்தில் வழிப்பாடு ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாரம் பரிய காலத்திலிருந்து இன்று வரை ஆடி மாதத்தில் அம்பிகை வழிப்பாடு சிறப்புற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் அம்பிகைக்கு மிக பிடித்த ஆடி கூழினை காய்ச்சி அம்மனுக்கு படைத்து மக்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது இந்த ஆடி மாதத்தில் ஆலயங்களில் காணப்படும் விசேட அம்சமாகும்.