ஆள் இல்லா விமான தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த ரஷ்யா..!
உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலை ரஷ்யா முறியடித்துள்ளது.
உக்ரைன் ஆனது ரஷ்ய தலைநகரம் மொஸ்கோ மீது 11 ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆள் இல்லா விமானங்களை ரஷ்யாவானது தாக்கி அளித்துள்ளதாக மொஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியா தெரிவித்துள்ளார்.இதன் போது எந்த வித பாதிப்புக்களோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.இதே வேளை 50 ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகள் உக்ரைன் ஆல் அழிக்கப்பட்டன என்று உக்ரைனின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை நேற்று முன்தினம் முதல் ரஷ்யாவால் உக்ரைனின் 72 பகுதிகளை இலக்காக கொண்டு வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை உக்ரைனின் விமானப்படை தளபதி மிகோலா ஒலசெக் தெரிவித்துள்ளார்.
2022 ஆண்டு முதல் உக்ரைன் ரஷ்யா போரானது நடைப்பெற்று வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் காரணமாக உலகளவில் பாரிய பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களின் வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனிற்கு அதரவாக அமெரிக்கா,இங்கிலாந்து ,ஜெர்மனி என பல நாடுக்கள் ஆயுத ,பண உதவிகளை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.