‘ஓயும் ஓடம்’ நூல் வெளியீடு..!
திருக்குறளை நாம் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.அந்த குறளை கவி நடையில் புத்தகமாக தந்திருக்கிறார் கவிஞர் ஜஸூரா ஜலீல்.ஓயும் ஓடம் என்ற அழகிய பெயர் கொண்டு தனது கவித்தொகுப்பை வெளியிடுகிறார்.
எதிர்வரும் 25 ம் திகதி ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் பம்பலபிட்டியவில் அமைந்துள்ள புதிய கதிரேசன் மண்டபத்தில் இந்த நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்த நூல் பற்றி கவிஞர் தெரிவித்திருப்பதாவது
‘எனது பெயர் ஜஸூரா ஜலீல்
எனது நூலின் பெயர் ஓயும் ஓடம்
நான் வெளியிடும் இந்நூலானது திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தையும் 133 அதிகாரங்களையும் ஐந்தே நாட்களில் கவிதையாக எழுதி உலக சாதனை படைத்துள்ளேன்.
திருக்குறளின் 133 அதிகாரத்துக்குள்ளும் பத்து குறள்கள் இருக்கின்றன. அப்படியான ஒவ்வொரு குறள்களிலும் மொத்தமாக எதைக் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அதிகாரம் முழுதும் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் படியாக நான் கவிதையாக வடித்துள்ளேன். இந்த நூலின் அடுத்த சிறப்பம்சம் யாதெனில் திருக்குறள் அனைவருக்கும் இலகுவான முறையில் போய்ச் சேர வேண்டும் எனவும் , சிறு குழந்தைகளும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் அமையப் பெற்றதும் தான் இந்நூலின் அடுத்த சிறப்பம்சமாகும். இந்த நூல் தமிழ் மீது நான் கொண்ட தீராத அன்பால் எழுதப்பட்டது.
இந்த நூல் ஒரு சராசரி மனிதனையும் சிறந்த முழு மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனக்காக தாங்கள் கட்டாயம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
என்று தெரிவித்துள்ளார். நமது நாட்டின் அற்புத படைப்புகளுக்கு நமது ஆதரவை வழங்குவது நமது கடமையாகும்.இன்னும் நிறைய படைப்புகளை வழங்கவும் ,ஓயும் ஒடம் புத்தக வெளியீட்டு விழா சிறப்புறவும் இனிய வாழ்த்துக்களை வெற்றி நடை தெரிவித்து மகிழ்கிறது.