தூய ஜெரோம் கல்லூரியில் ‘பதவன்’ நாவல் வெளியீடு

தூய ஜெரோம் கல்லூரியில் எழுத்தாளர் அருள் எழுதிய
‘ பதவன் ‘நாவல் வெளியிடப்பட்டது.
பதவன் நாவல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கோட்டாறு மேனாள் ஆயர். பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி நூலை வெளியிட்டுவைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாணவர்கள் தனித்திறனோடு செயல்பட புத்தகங்களை வாசிக்க வேண்டும்.வாசித்தலோடு நின்றுவிடாமல் ,தாங்களும் புதிய புதிய படைப்புகளைப் படைக்க முயல வேண்டும். நூலகத்தில் உங்களுடைய புத்தகமும் இருக்கவேண்டும் என்ற ஆசை பிறக்க வேண்டும்.வாசிப்பும் படைப்பும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

கல்லூரித் தாளாளர் அருட்பணி சுவக்கின் தலைமை தாங்கி,தலைமையுரை ஆற்றினார்.
மேனாள் துணைவேந்தர், பேராசிரியர்
முனை.ஜி.எம்.ஜோசப் டன்ஸ்டன் பதவன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.


வணக்கத்துக்குரிய ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் புத்தகத்தை வெளியிட்டார்.

முதல் பிரதியைத் தாளாளர் அருட்பணி.சுவக்கின் பெற்றுக் கொண்டார்.கல்லூரி முதல்வர் முனை.அ.அமல்ராஜ் இரண்டாம் பிரதியைப் பெற்றுக் கொண்டார். விழாவில் அருட்பணி.எட்வின்,திரு.லெஸ்லின் எழுத்தாளர்கள் குறும்பனை சி.பெர்லின், கென்னடி ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேவேளை மாணவி புருனிலா அனைவரையும் வரவேற்றார்.

நிறைவாக நூலாசிரியர் பதவன் அருள் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை பேரா.முனை.சா.ஜோக்கிம் பெலிக்ஸ் ஒருங்கிணைப்பு செய்ததோடு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் என அனைவரும் கலந்து கொண்டனர்.