இங்கு தான் விமானம் விழுந்ததா?
2014ம் ஆண்டு மார்ச் 08ம் திகதி மலேசிய எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி பயணிக்கும் போது காணாமல் போனது.
குறிப்பிட்ட விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் எதனையும் கண்டுப்பிடிக்க முடியாத நிலையில் 2017 ம் ஆண்டு தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த விமானம் விழுந்த இடத்தை கண்டுப்பிடித்து விட்டதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானி வினசென்ட் லைன் தெரிவித்துள்ளார்.
டஸ்மேனியா பல்கலைகழக கடல் மற்றும் அந்தாட்டிக்க ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன் லின்க் இன் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் 6,000 மீட்டர் ஆழமான பகுதியில் விமானம் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கடைசியாக விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிழக்கில் அவசர தரையிறக்கத்தை ஏற்படுத்த தொடர்பு ஏற்படுத்தப்பட்டமை,இதனை JN ஏற்றுக்கொண்டது.
விமானம் விழுந்திருக்கும் இடமானது கரடு முரடான ஆபத்தான ஆழ்கடல் பகுதியாகும் .மேலும் செங்குத்தான பக்கங்கள்,பெரிய முகடுகள்,வேறு சில ஆழமான துளைகளாலும் சூழப்பட்ட வண்டல மண் நிறைந்த பகுதி . இதில் விமானம் விழுந்தால் கண்டுப்பிடிப்பது கடினம்.இந்த பகுதியில் தேடுதல் நடத்தப்படுமா இல்லையா என்பது அதிகாரிகளினதும் நிறுவனங்களினதும் யோசனையை பொருத்தது.
ஆனால் அறிவிலால் எம்எச் -370 விமானம் எங்கு உள்ளது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.என தெரிவித்துள்ளார்.
அறிவியலால் எம்எச்-370 மர்மம் விலகியது.என்ற தலைப்பில் பல விளக்கங்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.