பிரார்த்தனை நிகழ்வில் 06 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு..!
கிழக்கு திமோரிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள போப் ஆண்டகை டாசிடோலு அமைதிப் பூங்காவில் பிரார்த்தனை நிகழ்வினை நடத்தினார். இந்த பிரார்த்தனை நிகழ்வில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொண்டு ஆசிகளை பெற்றனர்.
ஒரு போப் பாண்டவரின் பிரார்த்தனை நிகழ்வில்,தேசிய மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் அதிகளவான மக்கள் பங்கேற்று இருப்பது இது தான் முதல் தடவை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கருந்து தெரிவித்த போப் ஆண்டகை அதிகளவான குழந்தைகள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும்,அமைதியான,அரோக்கியமான குழந்தை பருவம் இருப்பது மிக அவசியம் என்றும் அதனை அரசியல் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
1975ம் ஆண்டு கிழக்கு திமோரை போர்த்துக்கல் கைவிட்டது .அதன் பிறகு இந்தோனேசியா கிழக்கு திமோர் மீது படையெடுத்தது.பின் அதனை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.இதன் பிறகு இந்தோனேசியாவிற்கு எதிராக கிழக்கு திமோர் மக்கள் போராட்டம் நடத்தி 25 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்பெற்றது.இதன் போது 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.இவர்களின் உடல்கள் இந்த அமைதிபூங்காவில் புதைக்கப்பட்டன. இந்த இடத்திலேயே இன்றைய தினம் பிரார்த்தனை நிகழ்வை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.