“அதானி” நிறுவனத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்..!
கென்யாவின் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தம் தங்களது நாட்டுக்கு எவ்வித நலனையும் வழங்க போவதில்லை எனவும்,தங்களது வேலை வாய்ப்பு ஆபத்து நிகழும் எனவும் விமான நிலைய பணியாளர்கள்,மனித உரிமை அமைப்புகள்,தொழிலாளர்கள்,பொது மக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்பிற்கு மத்தியில் கென்ய ஜனாதிபதி வில்லியம ருடோ தனது ஆதரவினை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக விமான நிலைய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.இந்த போராட்டம் காரணமாக நேற்று முதல் விமான சேவைகள் காலதாமத மாகின,இதனால பயணிகள் அசௌகரியங்களை சந்தித்தனர்.
இதே வேளை ஜோமா கென்யாட்டா விமான நிலையமானது ஒரு மணித்தியாலத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் புதிய ஓடு பாதை அமைத்தல்,புதிய பயணிகள் முனையத்தை மேம் படுத்துதல்,புதிய வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற இன்னோரான விடயங்களை அதானி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.