பாகிஸ்தானில் குரங்கம்மை தொற்று..!
பாகிஸ்தானில் குரங்கம்மை நோய் அடுத்தடுத்து பதிவாகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொற்றுக்கு இழக்கான 5 வது நபர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொற்றுக்குள்ளான 4 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.
குரங்கம்மை நோயை, சர்வதேச சுகாதார தாபனம் அவசரகால நிலையாக கடந்த மாதம் பிரகடனப்படுத்தியிருந்தது.
இதன் பாதிப்பு அதிகளவில் ஆப்ரிக்காவில் காணப்படுகிறது.குரங்கம்மை பாதிப்பின் காரணமாக இதுவரை 500 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இதே வேளை ஐரோப்பாவில் சில நாடுகளிலும்,ஆசியாவில் சில நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.