உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி வழங்க கூடாது-புடின்..!
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மேற்கத்தய நாடுகள் உதவிகள் வழங்க கூடாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.ரஷ்யா மீது ஆள்ளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடாத்திவருகிறது.மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை பயன் படுத்தும் திறன் உக்ரைன் இராணுவத்திற்கு கிடையாது.
இந்த ஏவுகணைகளை செயற்கை கோள் மூலமான உளவுத்தகவல்களை பெறாமல் பயன்படுத்த முடியாது,அந்த வசதிகள் உக்ரைன் இராணுவத்திடம் இல்லை .இந்நிலையில் நேட்டோ ,ஐரோப்பிய யூனியன்,அமெரிக்கா ஆகியவற்றின் செயற்கை கோள்களை தான் உக்ரைன் பயன்படுத்த வேண்டும்.மேலும் இந்த ஏவுகணைகளுக்கு தேவையான அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளது.உக்ரைன் இராணுவத்தினரால் பயன் படுத்த முடியாது.எனவே இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுப்படுகிறதா இல்லையா என்பதே முக்கியம்.
இதனை பயன் படுத்த உக்ரைன் அனுமதித்தால் ,அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக போர் புரிவதற்கு சமம் என்றார்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் போர் நீடித்து வருகின்ற நிலையில் பலர் உயிரிழந்ததுடன்,உலகளவில் பாரிய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.