கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு..!
பெரிய தலையிடியாக இருந்த கடவுச்சீட்டி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முதல் வழமை போன்று கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்படும்.
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.இதன் காரணமாக தடையின்றி கடவுச்சீட்டினை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் வந்துள்ள 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களும் விரைவில் தீர்ந்து விடும்.அதன் பிறகு மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படும் நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.
இதே வேளை மேலும் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டிற்காக மக்கள் பல நாட்கள் அலைந்து திரிந்து அசௌகரியத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.