விழாமல் மிதிவண்டி ஓட்டியவர்கள் இருக்கிறார்களா?
👍👍👍👍👍👍👍👍👍👍👍 *அப்புறம் என்ன ?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
👍👍👍👍👍👍👍👍👍👍👍
விழாமல்
மிதிவண்டி ஓட்டியவர்கள்
இருந்தால்
கைத் தூக்குங்கள்….
தண்ணீர் குடித்து
மூச்சுத் திணறாமல்
நீச்சல் கற்றவர்கள் இருந்தால்
எழுந்து நில்லுங்கள்…..
ஓட்டிப் பழகாமல்
வாகனம்
ஓட்டியவர்கள் இருந்தால்
தனியாக
ஒதுங்கி நில்லுங்கள்…..
உணவை இறைக்காமல்
உண்டு பழகிய
பிள்ளை இருந்தால்
முன்னாடி
வந்த நில்லுங்கள்……
ஆசிரியரிடம்
அடி திட்டு வாங்காமல்
படித்தவர்கள் இருந்தால்
அந்தப் பக்கம் நில்லுங்கள்…..

அப்புறம் என்ன
அதில் சேர்ந்தால்
தோற்றுவிடுவேன்
இதில் சேர்ந்தால்
தோற்றிடுவேன் என்று
ஓரத்தில்
ஒதுங்கி ஒதுங்கி போய்
நிற்கின்றீர்
போங்க போய் முன்னாடி நில்லுங்க….. *கவிதை ரசிகன் குமரேசன்*
👍👍👍👍👍👍👍👍👍👍👍