இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்..!

இஸ்ரேலின பாதுகாப்பு அமைச்சர் யோவ் கொலண்ட் பதவி நீக்கப்பட்டுள்ளார்.இவரின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லாததன் காரணமாக பதவி நீக்கபபட்டுள்ளார் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வெளியுறவு துறை அமைச்சராக இருந்த கோட்ஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.இதனையடுத்து வெளியுறவு துறை அமைச்சராக கிதியோன் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நீக்கத்தின் பின் நெதன் யாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் “போரின் ஆரம்ப கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சரின் செயற்பாடுகள் நல்ல பலனை கொடுத்தன.அவர் மீது நம்பிக்கை இருந்தது.ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கும் விதமாக இல்லை.போரை வழிநடத்துவது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவுகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ஒத்துபோக வில்லை.இதனை சரி செய்ய நிறைய முயற்சிகள் எடுத்தேன்.ஆனால் எங்களுக்கிடையிலான பிளவு மேலும் அதிகரித்து விட்டது.இதன் பலனை எங்கள் எதிரிகள் அனுபவித்தனர்.இது மேலும் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.எனவே தான் பாதுகாப்பு அமைச்சரின் பதவி காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தேன்.”

என்று தெரிவுத்துள்ளார்.ஒருவருடத்திற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் ,பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *