மாலையின் மகிமை..!
மாலைப்பொழுது பற்றி பாடலாய் ஒரு கவிதை…….
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 *மாலைப்பொழுது* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
மண்ணில்
ஒரு சொர்க்கம் இருக்கிறது
அது மாலை பொழுது தான் ….!
மனம் சொக்கித்தான் ஏங்கும்
கவிதை எழுதத்தான்….!
செம்பருத்தி தோட்டம்
பூத்தது போல்
செவ்வானத்தின் தோற்றமே… !
உதிரம் துடைத்த
பஞ்சு போல்
மேகங்களின் மாற்றமே…..!
கிராமத்துப் பெண்ணின்
குங்குமம் பொட்டாய்
மேற்கில் கதிரவனின் காட்சி…!
விண்ணிலும் மண்ணிலும்
எங்கும் நடக்கிறது
அழகின் ஆட்சி……!
தென்றலின் தீண்டலில்
மனம் மெல்ல உருகுமே….!
பறவைகளின்
சிறகு இசையில்
செவிகளில் சுகம் பெருகுமே….!
இருளும் ஒளியும்
சங்கமிக்கும்
எட்டாவது அதிசயம் நிகழுமே…!
கார்த்திகை
தீபங்கள் ஏற்றியது போல்
விண்மீன்கள் சுடர் விடுமே…..!
எஸ் பி பாலசுப்ரமணியனாய்
எங்கோ இருந்து
ஒரு குயில் பாடுமே…..!
இரைத் தேடி பறந்த பறவைகள்
தன் கூட்டைத்தேடுமே….!
உழைத்தவர்கள்
எல்லாம் வீடு திரும்புவது
ராணுவ அணிவகுப்பாய்
இருக்குமே…..!
ஊதியம் பெற்று வருவதால்
அவர்களுடைய முகம்
ஊட்டி மலர் போல் சிரிக்குமே…!
வாடைக்காற்றில் காதல் உணர்ச்சி
சிறகு விரிக்குமே…..!
பஜ்ஜி போண்டா
பனியாரம் வாசனை
மாலை காற்றில்
கடைத் திறக்குமே…….!
மின்மினி பூச்சியாக
மின்சார விளக்குகள் மின்னுமே….!
கன்னிப் பெண்கள்
வெளியே வந்து
காற்று வாங்க நிற்கும் போது
காளையர்கள்
மனம் ஏதோ பண்ணுவேன்……!
களைத்தவர்களுக்கு
தேநீர் கொடுத்திடுமே….!
கவிஞர்களுக்கு
கவிதை தந்திடுமே…….!
மழலைகள்
விளையாட வழி வகுத்திடுமே…..!
இந்த மாலைப்பொழுது….
கோவிலில்
ஒலிக்கும் தெய்வீக பாடலில்
அந்த மாலை பொழுதே
மயங்குமே…….!
எந்த கவலையும்
மனிதர்களை
நெருங்க தயங்குமே……!
மாலைப்பொழுது போல்
ஒரு நேரம் இல்லை மண்ணிலே…!
அதன்
கோடி கோடி அழகை பார்த்து
ரசிப்போம் கண்ணிலே…. *கவிதை ரசிகன்*
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀