இஸ்ரேலிய பிரதமருக்கு மரதண்டனை வழங்க வேண்டும்.-காமேனி
இஸ்ரேலிய பிரதமர் பெஞசமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “காசாவிலும் லெபனானிலும் சியோனிச ஆட்சி போர் குற்றம் செய்துள்ளது . தற்போது அவர்களை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது போதாது .நெதன்யாகு மற்றும் இந்த ஆட்சியின் கிரிமினல் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலானது ஓராண்டிற்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் காஸா முனையில் போர்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் ,இதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,முன்னால் பாதுகாப்பு மந்திரி யோவ் காலண்ட் ,ஹமாஸ் தலைவர் முஹமது தைப், ஆகியோரை கைது செய்யுமாறி கோரி சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெஞ்சமின் நெதன்யாகு,ஜோபைடன் ,தங்களை தற்காத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் போர் குற்ற வழக்கை விசாரித்த சர்வதேச நீதி மன்றம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் கொலண்ட், ஹமாஸின் தலைவர் முஹமது தைப் ஆகியோருக்கு கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதற் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை சர்வதேச நீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது.
இந்நிலையிலேயே ஈரானின் உயர் தலைவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.