ஹிஸ்புல்லாவின் வான் படை தலைவர் உயிரிழப்பு-இஸ்ரேல்..!
இஸ்ரேல் ஹிஸ்புல்லா இராணுவத்திற்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இடம் பெற்றுள்ள நிலையில் ஹிஸ்புல்லா இராணுவத்தின் வான் படை தலைவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பெய்ரூட்டில் நடந்த தாக்குதலின் போது வான் படை தலைவர் மற்றும் துணை தளபதி ஜாபர் ஹலி சமஹா ஆகியோர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த ஓராண்டிற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலிற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துவருகின்றன.இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனானை தலைமையிடமாக கொண்டியங்கும் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலிற்கும் ஹிஸ்புல்லா இராணுவத்தினருக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஜோபைடன் அறிவித்தார். இந்த நிலையில் இஸ்ரேலானது ஹிஸ்புல்லா இராணுவத்தின் வான் படை தலைவர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.