வெள்ளத்தால் பாதிப்படைந்த மலேசியா..!
மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.மலேசியாவின் கிளந்தன்,திரங்கானு ஆகிய இடங்களில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை தெற்கு தாய்லாந்தில் அதிக மழை பெய்துள்ளது. மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 34 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.