“ஐக்கிய அரபு அமீரகம்” பாலஸ்தீன மக்களுக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவிப்பு..!
பாலஸ்தீனத்திற்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாராளுமன்ற சபாநாயகர் முஹமட் அஹமட் அல் யமாஹி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது “அனைத்து மட்டங்களிலும் அரசியல் மற்றும் மனிதபிமான அடிப்படையில் பாலஸ்தீனததை ஆதரிப்பதற்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.மேலும் பாலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான துன்பங்களை போக்குவதற்கு ஆதரவளிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதன்மையாக உள்ளது.இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தனது பாலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கு மரியாதை செலுத்துவது ஒரு தார்மீக மற்றும் மனிதபிமான கடமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவருடத்திற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.