ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம் பதிவு..!
நேற்று இரவு 6 முறை திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இரவு 12 மணிமுதல் காலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக ரிச்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமையும் திபெத்தில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.இதன் காரணமாக120ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது