போகி பண்டிகை..!
போகி பண்டிகை கவிமழை!
🌾🪴🪴🪴🪴🪴🪴🎋
தீயதை கழித்து
நல்லதை கூட்டுவோம்!
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டளை!
நல்ல செயலுக்கு
இணைந்த கைகள் ஆகிடுவோம்!
பழையதை பொசுக்கி
புதியதை படைப்போம்!
புதிய எண்ணத்தில் நேர்மையை
பற்றி நடப்போம்!
உண்மையும் வென்றிட
உண்மையாய் உழைப்போம்!
தீமையை தீயிட்டு
மொத்தமாய் அழிப்போம்!
நம்மையே மாற்றினால்
நானிலம் மாறிடுமே மாந்தர்காள்!
நல்லவை நடந்திட நன்மைகள் கிடைத்திடும்!
இன்புற்ற வாழ்வில் இதயங்கள் குளிர்ந்திடுமே!
ஏர் ஓட்டம் ஏற்றம் பெற
தேர் ஓட்டம் சிறப்புறுமே!
மக்களே!எல்லோரும் இதை நினைவில் வைத்து
நம் நாட்டின் விவசாயத்தை
பாதுகாக்க சபதம் கொள்வோம்…!!
ஒன்றுபடுவோம்!!
உயர்வடைவோம்!!
🎋🌾🎋🌾🎋🌾🪴🍃🎋🌾🍃🪴
பா ஆக்கம்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை